Skip to main content

“மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” -  மாணவரின் உருக்கமான வீடியோ! 

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

"Government should take action to rescue students" - Student's   video!

 

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் வேணுகோபால் நகரைச் சேர்ந்தவர் கிப்சன் ஜோசப் செல்வராஜ். இவர் உக்ரைனில் உள்ள கீவ் நகரில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து வருகிறார். போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் எல்லைக்கு வருவதற்கு சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் தண்டவாளத்தில் நடந்து சென்றதாகவும், தற்போது மெட்ரோ ஸ்டேஷனில் பதுங்கி உள்ளதாகவும், இங்கு உணவு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறோம் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும்  அவர் தன்னுடைய வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார். மேலும் ரயிலில் வருவதற்கு முயன்றால் உக்ரைனை சேர்ந்தவர்கள் இந்தியர்களை ரயிலில் ஏற விடாமல் தடுப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்