Published on 02/03/2018 | Edited on 02/03/2018

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தொழுநோயாளிகளுக்கு இலவச ஆடை வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை தொழுநோயாளிகள் மருந்தகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வே.ஜெகன்நாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பி.ஆழ்வாரப்பன், ஆர்.சுப்பிரமணியன், ம.வெள்ளைச்சாமி, ஆர்.முருகேசன், பி.கருத்தராஜ், எஸ்.எம்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நலக்கல்வி அலுவலர் ஜி.வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர்கள் விஸ்வநாதன், பழனியப்பன், ஆய்வக நுட்பனர் ஆலின் வில்சன் உள்ளிடோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 75 தொழு நோயாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஆடைகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.