கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கற்றல் விளைவுகளில் வலுவூட்டல் பயிற்சி நடைபெற்றது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு (10-1-22) முதல் கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கற்றல் விளைவுகள் பயிற்சி ரிஷிவந்தியம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த பயிற்சியில் ரிஷிவந்தியம் ஒன்றியம் பெரிய உடையாம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி கணிதம் ஆசிரியை ஹேமலதா சதீஷ் கற்றல் விளைவுகளின் பயிற்சியில் ஒன்றான வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் மூலம் கணிதம் கற்கும் முறையை அரங்கேற்றி பாடினார்.
இந்நிகழ்ச்சியில் தாரணாபுரி அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை ஜோசபின் மேரி ரிஷிவந்தியம் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் கிரிஸ்டா பரிமளா செல்வி , வெங்கலம் பள்ளியின் இடைநிலை ஆசிரியை ஆனந்தி, கீழ்பாடி பள்ளியின் இடைநிலை ஆசிரியை மணிமேகலை, லா.கூடலூர் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் பரிதாஸ்பேகம் ராணி இடைநிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வில்லுப்பாட்டின் மூலமாக வடிவியல் என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு நடத்திக் காண்பித்தனர். வில்லுப்பாட்டின் வாயிலாக மாணவர்களுக்கு வடிவியல் பாடத்தில் கற்றல் விளைவுகள் பற்றி ஆசிரியர்கள் அருமையாக எடுத்து கூறினர்.