கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 வகையான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் சார்பில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் செயல்படும் 100 நாள்கள் வேலை நடைபெறும் இடத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் வந்த நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டன. மேலும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தனிமனித இடைவெளி கடைபிடித்தும் முகக் கவசம் அணிந்தும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் இதில் மருத்துவர் சூர்யா,கிராமப்புற செவிலியர் வனிதா, சுகாதார ஆய்வாளர் கார்த்திக் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் நாகமணி, ஒன்றிய குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.