Skip to main content

சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் -விவரங்களைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில், உயரலை எழும்பும் இடங்களில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின்  விபரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்,  சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

 Government orders filing of illegal buildings in Chennai East coast

 

தமிழகப் பொதுப்பணித்துறை, கடலோர ஒழங்குமுறை மண்டலம் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், முட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 5 சொகுசு பங்களாக்களில் மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (27-ஆம் தேதி)  பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வராத நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞரிடம், உயரலை  பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை, வரைபட விபரம், கூகுள் வரைபடத்தில் கட்டிடம் அமைந்துள்ள இடம் ஆகியவற்றின் விபரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை  ஜனவரி 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதுபோல, அப்பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் உள்ள நிலையில், நோட்டீஸ் அனுப்பியும் தற்போது வரை 400 கட்டிடதாரர்கள் மட்டுமே உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள  வழக்கை காரணம் காட்டி மற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்