விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் உள்ளது காணை. இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வந்துசெல்லும் ஒரு மினி வணிக நகரம் காணை.
அப்படி பரபரப்பாக உள்ள இந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள முன் பகுதியில் வணிக நோக்கத்தின் அடிப்படையில் மக்கள் சேவையை கருத்தில் கொண்டும் அரசு 14 வியாபாரக் கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகள் 2015-16 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 4 ஆண்டுகளாகமூடியே கிடக்கின்றன மேற்படி கடைகளை ஏல முறையில் வியாபாரிகளுக்கு கொடுத்து வாடகை வசூலித்து இருக்க வேண்டும். இப்படி செய்யாதால் ஆண்டுக்கு பல லட்சம் வருமானம் இழப்பு கட்டுப்பட்ட கடைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. கடைகளுக்கு காப்புத் தொகை வாடகை நிர்ணயம் செய்வது பொதுப்பணித்துறை அதைநிர்வாகம் செய்வது ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கடைகளை வாடகைக்கு விடாமல் கிடப்பில் போட்டுள்ளனர் என்று கூட்டம் குற்றம் சாட்டுகிறார்கள் ஊர் மக்கள்.
மேலும் ஆளுங்கட்சியினர் தலையீடு காரணமாகவும் கடைகள் திறப்பது கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போதுதான் அதிகாரிகள் இது சம்பந்தமாக தூசு தட்டி கடைகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அரசு பணத்தை முதலீடு செய்து கட்டப்பட்ட பணம் விரயம் அதன் மூலம் வரவேண்டிய வருவாய் இழப்பு இதற்கெல்லாம் காரணம் அதிகாரிகள் மெத்தனம் தான் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கடைகளை வாடகைக்கு விட்டு வருமானத்திற்கு வழிவகுக்குமாறு காணை பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இனிமேலாவது மூடிக்கிடக்கும் கடைகள் திறக்குமா அரசுக்கு வருமானம் வருமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.