Skip to main content

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம்..!        

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

government employees demands various things


பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழக அரசைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழகம் முழுக்க மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதையடுத்து, 2ஆம் தேதி காலை 11 மணிக்கு ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தொடங்கிய மறியல் போராட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராக்கி முத்து, மாநிலப் பொருளாளர் பேயத் தேவன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

 

முன்னதாக மாநிலத் துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் விஜய் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இதில் "புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் நூலகங்கள் எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியம் பெறுகிற 2 லட்சம் ஊழியர்களுக்கு  வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேரை கைதுசெய்தனர்.    

 

 

 

சார்ந்த செய்திகள்