அரசு ஊழியர்கள் ஈரோட்டில் சாலை மறியல்
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று மாநிலம் முழுக்க சாலை மறியல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கனக்கில் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபங்களில் வைத்துள்ளார்கள்.
- ஜீவாதங்கவேல்.