Skip to main content

''வேலை இல்லை என எந்த இளைஞனும் கூறக்கூடாது என்ற நிலையை அரசு உருவாக்கி வருகிறது''-மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

 '' The government is creating a situation where no young person should say no to work '' - MK Stalin's speech!

 

இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் 164 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் 931 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கவுள்ளார்.  தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டுள்ளார்.

 

தற்பொழுது விழா மேடையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கப்பட்டதுதான் 'நான் முதல்வன்' திட்டம். இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல உலகின் வளர்ச்சிக்கும் காரணமானவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம். வேலை இல்லை என்று எந்த இளைஞனும் கூறக்கூடாது என்ற நிலையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் மாணவர்களுக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அனைவருக்கும் சமமான சமூக நீதி என்ற தமிழக அரசின் உயரிய திராவிட நோக்கத்தை உயர்கல்வியில் நிறைவு செய்யும் பொருட்டு சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளில் 2022-2023 -ஆம் கல்வியாண்டு முதல் இளநிலை பயிலக்கூடிய மாணவர்களுக்கு சமூக நீதி, திருக்குறள் காட்டும் தொழில் இறை ஆகிய பாடங்கள் விருப்பப் பாடங்களாக இடம்பெற இருப்பதைப் பாராட்டி மகிழ்கிறேன். பட்டங்களை தாண்டிய சமூக அறிவையும் நீங்கள் அனைவரும் பெற இது நிச்சயம் உதவும்'' என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்