Skip to main content

துப்பாக்கி சுடுதலில் அசத்திய அரசு கல்லூரி மாணவி; வேளாண் அமைச்சர் பாராட்டு

Published on 22/08/2024 | Edited on 22/08/2024
Government college student wins gun shooting competition; Agriculture Minister Appreciation

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற காட்டுமன்னார்கோவில் அரசு கல்லூரி மாணவிவிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவி கீர்த்தனா. ஆங்கில துறையில் 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். என்சிசி யில் முதலாம் ஆண்டு துப்பாக்கி சுடும் பிரிவில் பங்கேற்று பல்வேறு நிலைகளை தாண்டி கடந்த ஜூலையில் கோவையில் நடைபெற்ற 49 வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார். போட்டியில் தீவிரமாக  செயல்பட்டு 3 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கமும் பெற்றார்.  

மேலும் இவர் மாநில அளவிலான போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில்  தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இந்நிலையில் மாணவி கீர்த்தனாவை தமிழக வேளாண் மற்றும் உழவர்நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். கல்லூரியின் முதல்வர் மீனா மற்றும் கல்லூரியின் உடற்கல்வி துறை மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

சார்ந்த செய்திகள்