கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ள நிலையில் கரோனா தாக்கம் குறைவாக உள்ள மண்டங்களில் பேருந்து போக்குவரத்து இன்று முதல் தொடங்கியுள்ளது. பேருந்து போக்குவரத்து தொடங்கினாலும் மக்கள் அதிகம் பேருந்துகளில் ஏறி பயணிக்கவில்லை.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி நோக்கிப் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று பழைய பேருந்து நிலையம் அருகே வந்தது. அப்போது எதிரில் இருந்து வேகமாகப் பறந்து வந்த கல் ஒன்று பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகளை உடைத்தது. அவசரமாகப் பேருந்தை நிறுத்தி கல் வீசியவரைப் பார்த்தபோது தான் தெரிந்தது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்பது.
ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து நெரிசல் இன்றி சாலைகளில் சுதந்திரமாகச் சுற்றி திரிந்த பெண் தற்போது பேருந்தைப் பார்த்ததும் இப்படிக் கல்வீசி தாக்கிவிட்டார் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.