குரூப் 2 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பை தெடர்ந்து துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர் நிலை இரண்டு, தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 2 தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது.
இதன்மூலம் மொத்தமாக 2,327 காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. மொத்தமாக கிட்டத்தட்ட 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் தேர்வினை எழுதியுள்ளனர் என தேர்வாணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பணி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குரூப் 2 தேர்வுக்கான மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2,540 ஆக உயர்ந்துள்ளது.