திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் கடந்த 29 ஆம் தேதி காலை முதல் பல நாட்களாக இரண்டு கடைகளிலும் தலா 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த சோதனையில் 2.2 கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கணக்கில் காட்டப்படாத 93.56 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வந்த நிலையில் சோதனை முடிவில் 2.2 கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த இரு நிறுவன கடைகளில் மட்டுமின்றி உரிமையாளர்களின் குடோன், வீடு, தாங்கும் விடுதி, தோட்டத்து வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.