Skip to main content

திடீரென குறைந்த தங்க விலை!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

Gold prices plummet!

 

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் சூழல் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது சற்று குறைந்துள்ளது.

 

உக்ரைன் போர் சூழல் காரணமாக கடந்த 24 ஆம் தேதி தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டிருந்தது. கடந்த 24 ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,856 ரூபாய் உயர்ந்து 39,608 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 232 ரூபாய் உயர்ந்து 4,951 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 72.70 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

 

இந்நிலையில் இன்றைய (26/2/2022) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 568 ரூபாய் குறைந்து 37,904 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து 4,738 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 69 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. போர் பதற்றம் காரணமாக கடந்த 24 ஆம் தேதி ஒரே நாளில் மூன்று முறை தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்