
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வந்த அரேபியா நாட்டு விமானத்தில் தங்கம் கடத்திவரப்டுவதாக கோவை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து, சார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த அரேபியா விமானத்தில் பயணித்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்தச் சோதனையின்போது, சந்தேகத்திற்கு இடமான ஒரு பயணியைக் கோவை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர், தனது மலக்குடலில் தங்கத்தை மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. அதையடுத்து மருத்துவர்கள் உதவியுடன் பயணியின் வயிற்றிலிருந்து 3 ஓவல் வடிவ கருப்பு நிற பாலித்தீன் பாக்கெட்டுகளில் பேஸ்ட் வடிவிலான சுமார் 640 கிராம் தங்கத்தை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தின் மதிப்பு சுமார் 31.68 லட்சம் ரூபாய் என கணக்கிட்டுள்ளனர். மேலும், மலக்குடலில் மறைத்து வைத்து தங்கத்தைக் கடத்திவந்த பயணியைக் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.