Published on 06/07/2022 | Edited on 06/07/2022

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வாரம்தோறும் புதன்கிழமையன்று வாரச் சந்தை நடப்பது வழக்கம். இச்சந்தையில் வழக்கமாக ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் மட்டுமே ஆடுகள் விற்பனையாகும்.
இந்நிலையில் வரும் ஞயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை என்பதால், ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. காலை ஏழு மணிக்கு தொடங்கிய சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து ஆடுகளை வாங்கினர். ஒரு ஆடு ரூ. 10,000 முதல் ரூ. 25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம், மூன்று மணி நேரத்தில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.