தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஞானமொழி. இவர் பி.டெக் முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரின் உறவினரான முரளிதரனுடன் அவருக்கு காதல் ஏற்பட பதிமூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்களது காதலுக்கு முரளிதரனின் குடும்பத்தினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, முரளிதரனுக்கு வேறொரு பெண்ணை நிச்சயிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஞானமொழி குட்டூர் கிராமத்தில் உள்ள முரளிதரனின் வீட்டின் முன்பு சென்று விஷம் அருந்தியுள்ளார். அதனைக் கண்ட முரளிதரனின் குடும்பத்தினர், அவரை கண்டுகொள்ளாமல் வீட்டின் முன்பக்க கதவைப் பூட்டியுள்ளனர். இதனால் அங்கேயே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஞானமொழியின் குடும்பத்தினர், முரளிதரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடலை வாங்கி சென்றனர்.