Published on 23/07/2018 | Edited on 23/07/2018
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித்தேர்வர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருந்தால் சட்டப்படிப்பு படிக்கலாம். 5 ஆண்டு சட்டப்படிப்பை முடித்தபின்னர் பார்கவுன்சிலில் பதியலாம். 10, +2 படிக்காமல் நேரடியாக தொலைதூர கல்வியில் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்பு படிக்க முடியாது. சட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் 10,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வாஞ்சிநாதன், ராகுல் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.