ஈரோடு முனிசிபல் காலனி வைகை வீதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளரான இவருக்கு காயத்திரி என்ற மனைவியும், 19 வயது அரவிந்த் என்ற மகனும், 17 வயது சந்தியா என்ற மகளும் உள்ளனர். சந்தியா ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11 -ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மகள் சந்தியாவுக்கு தனியாக ஸ்கூட்டர் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார், சண்முகசுந்தரம். இந்த நிலையில், சந்தியா நேற்று காலை ஸ்கூட்டரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அன்று மாலை வரை அக்கம்பக்கம் தேடிப்பார்த்தும் இதுவரை சந்தியா கிடைக்கவில்லை. செல்ஃபோனும் சுவிச் ஆஃப் என வந்துள்ளது. இதுகுறித்து, சண்முகசுந்தரம் ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவுசெய்து மாயமான சந்தியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். காதல் விவகாரத்தில் சந்தியா வீட்டை விட்டுச் சென்றாரா? அல்லது யாராவது கடத்திவிட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.