
அண்மையாகவே பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்பாக அதிகமாக புகார்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தும் வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னையில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவருக்கு கோவில் பூசாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக அடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சேகர். கோவில் பூசாரியாக இருக்கும் இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொழில் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமி உறவினர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில் கோயில் பூசாரி சேகரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோயில் பூசாரி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.