பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கும் நிலையில், பார் நாகராஜ் எனக் கூறிக்கொண்டு பெண் ஒருவரை மிரட்டும் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை பார் நாகராஜ் என்று கூறிக் கொள்ளும் அந்த நபர் குறிப்பிட்ட பெண் கோகிலா மீது காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டுகிறார். இல்லாவிட்டால் அந்த பெண்ணின் கணவரை கொலை செய்து விடுவேன் என எச்சரிக்கை செய்கிறார். அதற்கு அந்தப் பெண் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இந்த ஆடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது,
பார்நாகராஜ்?:ஹலோ என்னமா என்ன பண்ணிட்டு இருக்க பொள்ளாச்சியிலிருந்து பேசுறேன் யாருன்னு தெரியுதா?
மிரட்டப்படும் பெண்: உங்க பேர் என்ன?
பார் நாகராஜ்?:உங்ககிட்ட பேசணும்னு'னா எல்லாம் சொல்லிட்டு தான் பேசணுமா
மிரட்டப்படும் பெண்:யாருன்னு தெரியாம எப்படி பேசுறது.
பார் நாகராஜ்?: பொள்ளாச்சி சம்பத் கோகிலா மேலே கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு, வீடியோ எடுத்த தெரியுமா அந்த வீடியோவ டெலீட் பண்ணு... சரியா சும்மா வச்சுக்கிட்டு சீன்லாம் காட்டாத..
மிரட்டப்படும் பெண்: நான் என்ன வீடியோ எடுத்தேன், நான் எதை எடுக்கலையே
பார் நாகராஜ்?: என்ன வீடியோலா இல்லைன்னு சொல்ற, பேசுறது யாருன்னு தெரியுதா?
மிரட்டப்படும் பெண்: இல்ல யாரு?
பார் நாகராஜ்?: யாரா பொள்ளாச்சியில் வந்து கேளு பார் நாகராஜனுனா யாருன்னு சொல்லுவாங்க
மிரட்டப்படும் பெண்: புகார வாபஸ் வாங்க முடியாது
பார் நாகராஜ்?:உன் புருஷன் ஊருக்கு வந்ததும் தூக்குறேன்... வாபஸ் வாங்கு
மிரட்டப்படும் பெண்: முடியாது
பார் நாகராஜ்?: உன் புருஷன் என்னைக்கு வருவான் ஊரிலிருந்து பார்த்துகிட்டுதான் இருக்கேன். திருச்சி வந்தாலும் சரி, சென்னை வந்தாலும் சரி எங்கு வந்தாலுமே அவனை நான் தூக்குறேன் பாத்துக்கிட்டே இரு. முதலில் அவன் அப்புறம் உன்னை குடும்பத்தோடு தூக்குறேன்
மிரட்டப்படும் பெண்: நீங்க முடிஞ்சது பார்த்துக்கோங்க என்னால முடிஞ்சது நான் பாத்துக்குறேன்
பார் நாகராஜ்?:நான் ஏற்கனவே பல டென்ஷன்ல இருக்கேன் உனக்கு டைம் சரி இல்ல, நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன் என்று எனக்கு தெரியாது
என மிரட்டும் தோணியில் இந்த ஆடியோ வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில் பேசியிருப்பது தான் கிடையாது என பார் நாகராஜ் மறுத்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.