கவுரி லங்கேஷ் படத்திறப்பு -
நினைவேந்தல் நிகழ்ச்சி(படங்கள்)
பெங்களுருவில் படுகொலை செய்யப்பட்ட கருநாடக முற்போக்கு பகுத்தறிவுப் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் 10.9.2017 மாலை 6,30 மணியளவில் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் படத்தினை 'தி இந்து' பதிப்பகக் குழு தலைவர் என்.ராம் திறந்து வைத்தார். உடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், முனைவர் மு.நாகநாதன், தீக்கதிர் அ.குமரேசன், ஜனசக்தி த.இந்திரஜித், கலி.பூங்குன்றன், வீ.குமரேசன் உள்ளனர்.