Skip to main content

கரோனா... சிலின்டர்டெலிவரி மேன்களின் பரிதாப கேள்வி!

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

சுவாசிக்கும் காற்றைத் தவிர மனிதர்களின் அனைத்து இயக்கங்களையும் நிறுத்தி தனிமைப்படுத்த வைக்கிறது கொரோணா வைரஸ் பீதி. ஆளும் அரசுகள் தனது முழு பலத்தையும் பிரயோகித்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் விழிப்புணர்வுகளையும் தடுப்பு நடவடிக்கை, மருத்துவம் என எல்லாவற்றையும் செய்து வருகிறது.


அனைத்து பொது இடங்களிலும், வீடுகளிலும் கிருமி நாசினி ஊற்றி சோப்பு போட்டு கை கழுவுங்கள் என்ற பிரச்சாரத்தின் மூலம் மக்களும் அதன்படி தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். லாரிகள், பேருந்துகள், வாகனங்களுக்கும் கிரிமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லுகிற எங்களை அரசு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லையே என வேதனை குரல் எழுப்புகிறார்கள் வீடுகளுக்குச் சென்று கேஸ் சிலின்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள். 

 

gas




இனி அவர்களே கூறுகிறார்கள்... " கேஸ் சிலிண்டர் என்பது மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று இந்த கேஸ் சிலிண்டர்கள் தமிழகத்தில் பல்வேறு தொழிற்பேட்டையில் உள்ள சிலிண்டர் பிளான்ட் களிலிருந்து சிலிண்டர்களில் கேஸ் நிரப்பப்பட்டு ஒவ்வொரு ஊர்களில் உள்ள கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

 

பெருநகரங்களில் நூற்றுக்கணக்கான கேஸ் ஏஜென்சிகளும் சிறுநகரங்களில் பத்து இருபது கேஸ் ஏஜென்சி நிறுவனங்களும் இருக்கிறது இந்த கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் தனித்தனியாக குடோன்கள் வைத்துள்ளது. அப்படி பிளான்ட்களிருந்து அனுப்பப்படுகின்ற சிலிண்டர்கள் நேரடியாக தங்களது குடோனில் இறக்கி வைக்கிறார்கள். அதன் பிறகு அந்த சிலிண்டர்களை வீடுகளுக்கு சப்ளை செய்ய அனுப்பப்படுகிறது.

 

ஒரு கேஸ் ஏஜென்சி நிறுவனம் சராசரியாக 2 ஆயிரம் வீடுகள் முதல் 4 ஆயிரம் வீடுகளுக்கு கேஸ் சப்ளை செய்கிறது. இந்த சப்ளை பணியில் ஈடுபடுகிறவர்கள் ஒவ்வொரு நிறுவனத்திலும் 10 முதல் 30 பேர் பணிபுரிகிறார்கள் ஒரு கேஸ் டெலிவரி மேன் தினசரி 30-லிருந்து 60 வீடுகள் வரை கேஸ் சிலிண்டர் கொண்டு போய் அந்த வீடுகளுக்கு கொடுத்து விட்டு வருகிறோம். 


 

 

இந்தக் கேஸ் சிலிண்டர்கள் பிளான்ட்களிலிருந்து அனுப்பப்படும் போதும் சரி, ஏஜென்சி நிறுவனங்கள் அவர்கள் குடோன்களிலிருந்து டெலிவரிக்கு அனுப்பும் போதும் சரி, கிருமிநாசினி தெளிப்பது இல்லை. அந்தந்த ஏஜென்சி நிறுவனம் இதை செய்யவேண்டும் ஆனால் அவர்கள் செய்வதில்லை. அந்த கேஸ் சிலிண்டர்களை நாங்கள்தான் எடுத்துக் கொண்டுவந்து வீடுகளுக்கு சப்ளை செய்கிறோம். 
 

சில வீடுகள் முதல் மாடியிலும் சில வீடுகள் இரண்டு மூன்று நான்கு மாடிகளிலும் இருக்கிறது. படியேறிச் என்று சப்ளை செய்கிறோம் எல்லா இடங்களிலும் வைரஸ் தொற்று இருக்கும் என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது ஆனாலும் வேறு வழியில்லை கேஸ் சிலிண்டர் களில் கிருமிநாசினி அடித்து பாதுகாப்பாக கொடுத்தால் எங்களுக்கும் அது பாதுகாப்பு உணர்வை தரும். 


 

 

அதுமட்டுமல்ல சிலிண்டர் சப்ளை செய்துவிட்டு அந்த காலியான சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு வருகிறோம் இந்த சிலிண்டர் முறைகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பை பயன்படுத்துவதில் அந்தந்த நிறுவனங்கள் முறையாக கையாண்டு இருந்தால் எங்களுக்கு இந்த பயம் ஏற்படாது கேஸ் சிலிண்டர் விஷயத்தில் அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது நியாயமான கோரிக்கை எனக் கூறுகிறார்கள்.
 

வீட்டின் சமயலறைவரை செல்லும் பொருள் கேஸ் சிலிண்டர், அதே போல் சமயலறைவரை செல்லுபவர் சிலின்டர் டெலிவரி மேன் இதில் வைரஸ் தொற்று வராமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனடியாக எடுக்க வேண்டும். ஒவ்வொரு டெலிவரி மேனும் செலவு செய்து கிரிமி நாசினி மருந்து வாங்கி சிலின்டர்களில் தெளிக்க முடியாது. இதை செய்ய வேண்டியது கேஸ் சிலின்டர் தொழிலில் ஈடுபடும் ஏஜென்சி நிறுவனங்கள் தான்.

 

இப்படியும் ஒரு ஏரியா விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது என்பதை விழிப்போடு வேகமாகக் கவனிக்க வேண்டியது அரசின் பணி.



 

சார்ந்த செய்திகள்