![The gang came on a two-wheeler and stole a bicycle!](http://image.nakkheeran.in/cdn/farfuture/IkHbKj6GThYxJKki3VvqOxfQzqUVdLHYNd03cJfpAQ4/1692345402/sites/default/files/inline-images/th-1_4185.jpg)
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நத்தம் பகுதியில் ராஜசேகர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராஜசேகர் மற்றும் குடும்பத்தார் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்போது பட்டப்பகலில் வீட்டிற்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருடு போயிருந்தது. சைக்கிள் காணாமல் போனதால் அதிர்ச்சியான ராஜசேகர், தனது வீட்டிற்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து சைக்கிளைத் திருடி இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து குடியாத்தம் காவல் நிலையத்தில் ராஜசேகர் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்ததின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.