Skip to main content

''ஜி என்றாலே திமுகவிற்கு ஒத்துப்போகும் போல; சனி புடிச்சிக்கிச்சு'' - ஜெயக்குமார் பேட்டி

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

NN

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார்.  அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன. அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்து பட்டியலில் திமுகவை ஜி ஸ்கொயர் நிறுவனத்தோடு இணைத்து பேசியிருந்தார்.

 

இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களிலும், தமிழகத்தை தாண்டி கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

 

NN

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அப்பொழுது பேசிய ஜெயக்குமார், ''உதயநிதியையும், சபரீசனையும் அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் உண்மை வெளிவரும். 30 ஆயிரம் கோடி அரசு கருவூலத்திற்கு வந்தால் சொத்து வரி உயர்த்த வேண்டியது அல்ல, மின்சார கட்டணத்தை ஏற்றும் தேவை இருக்காது. வீட்டு வரி, பால் விலை என எதையும் உயர்த்தும் தேவை இருக்காது. ஆனால் பணத்தை பறிமுதல் செய்யும் அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் பொறுப்பு. வருமான வரித்துறை நடத்தும் இந்த சோதனை முதல் ஸ்டெப் என்று வைத்துக்கொள்ளலாம். மத்திய அரசு வேலையை காண்பிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஜி என்றாலே திமுகவிற்கு ஒத்துப்போகும் போல. அப்போ 2 ஜி இப்போ ஜி ஸ்கொயர். 2 ஜியால் ஆட்சியே கவிழ்ந்தது இப்பொழுது ஜி ஸ்கொயரால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வீட்டுக்கும் போகும் நிலைமை உருவாகும். கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிடுச்சு திமுகவுக்கு சனி பிடித்துவிட்டது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்