இலவச திட்டங்கள் ஏழை மக்களை கரம் கோர்த்து அழைத்துச் செல்லும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
''தமிழக மின்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''ஒரு மாநிலத்தின் வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும். கலைஞர் ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு விவசாயியே விலையை நிர்ணயிக்க முடியாது. உற்பத்திக்கான செலவை விட கூடுதலாக வைத்து விற்பனை விலையை நிர்ணயம் செய்ய முடியாது. இப்படி எந்த நிரந்தர தீர்வும் இல்லாமல் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாக உள்ள நிலையில் இலவச மின்சாரத்தை வழங்கி முதல்வர் விவசாயிகளை காப்பாற்றினார். மடிக்கணினி கொடுப்பதாக இருந்தாலும் சரி, சைக்கிள் கொடுப்பதாக இருந்தாலும் சரி மிக முக்கியமான திட்டங்கள். விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், இப்படி நிறைய இலவச திட்டங்கள் ஏழை மக்களை, அடித்தட்டு மக்களை கரம்கோர்த்து வாழ்வின் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் திட்டங்கள்'' என்றார்.