கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராமசாமி மேல்நிலைப்பள்ளியில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், பழனிபாபு அணி வணிகம் மற்றும் சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி மண்டலத்தின் துணை ஆளுநர் தீபக்குமார், மாவட்ட இருதய சிகிச்சை முகாம் தலைவர் பழனியப்பன், இராமசாமி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமிற்கு சிதம்பரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து 250- க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு இருதய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்படும் நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை சென்னை செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 50 பேர் மேல்சிகிச்சைகாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பரிசோதனை செய்ய வந்திருந்த பயனாளிகளுக்கு சிதம்பரம் தென்னவன் ரேடியோஸ் உரிமையாளர் ஆறுமுகம் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு சங்க உறுப்பினர் முத்துக்குமரன் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியை வருங்கால சங்கத் தலைவர் நடனசபாபதி தொகுப்புரையாற்றினார். மேலும் இச்சங்கத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.