Skip to main content

ஆணவக்கொலை செய்யப்பட்ட நந்தீஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்! பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!!

Published on 18/11/2018 | Edited on 18/11/2018

 

c


ஓசூரில் ஆணவக்கொலை செய்யப்பட்ட நந்தீஸ் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 


ஓசூர் அருகே சூடுகொண்டப்பள்ளியில் காதல் திருமணம் செய்த நந்தீஸ், சுவாதி ஆகியோர் பெண் வீட்டாரால் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் நந்தீஸின் குடும்பத்தினருக்கு இன்று (நவம்பர் 17, 2018) நேரில் ஆறுதல் கூறினார்.


அப்போது பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:


காதல் திருமணம் செய்த நந்தீஸ் & சுவாதி தம்பதியை பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் ஆசை வார்த்தைகளைக்கூறி மைசூரு அருகே மாண்டியாவுக்கு கடத்திச்சென்று உள்ளனர். அங்கே அவர்களை மிகக்கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைச் சிதைத்து, காவிரி ஆற்றில் வீசியுள்ளனர். கடந்த நான்கு முன்பே, நந்தீஸை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தும், அதன் மீது உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.


இந்த சம்பவம், மனசாட்சி உள்ள அனைவரையும் உலுக்கியுள்ளது. இதுபோன்ற ஆணவக்கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று இடதுசாரிகள், பல்வேறு தலித் அமைப்புகள் வலியுறுத்தியும் தமிழக அரசு காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.  


இதுபற்றி சட்டப்பேரவையில் பேசும்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகளே நடக்கவில்லை என்று பகிரங்கமாக கூறினார். இந்த சம்பவத்திற்குப் பிறகும், அவர் அதையே சொல்வாரா என்று தெரியவில்லை. இதுபோன்ற ஆணவக்கொலைகளை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்த கொலையில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறதோ அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். 


நந்தீஸ் ஆணவக்கொலைக்குப் பின்னால், மிகப்பெரிய சாதிவெறி இருப்பதாக கருதுகிறேன். இதுபோன்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளக்கு தூக்குத்தண்டனை தந்தால்கூட தவறில்லை. இது தமிழ்சமுதாயத்திற்கு மிகப்பெரிய அவமானம். நந்தீஸ் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

dmk and cpm parties tn assembly election

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன.

 

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதிப்பங்கீட்டுக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகள் உறுதியானது. அதைத் தொடர்ந்து, தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

dmk and cpm parties tn assembly election

 

அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று (தனி) சட்டமன்றத் தொகுதிகளும், மூன்று பொது சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை (தனி), அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தி.மு.க. கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதிகள் அனைத்தும் கிடைக்கவில்லை. கூட்டணிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் சில தொகுதிகளை மாற்றி பெற்றோம். நாளை மறுநாள் (13/03/2021) வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

’மொட்ட தலைக்கு சிகை அலங்காரம் செய்யும் வேலையை ரஜினி செய்து வருகிறார்’- கே. பாலகிருஷ்ணன் பேச்சு

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

 

சிதம்பரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.

k

 

பின்னர் அவர் சுதந்திரதின உரையாற்றுகையில் 73 வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் இரண்டாவதாக சுதந்திரப் போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்றார்.

 

 மத்தியில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி ஆட்சியில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் பங்கு சந்தை வீழ்ச்சி, அடைந்து தொழில்கள் முடங்கி போயுள்ளது, இதனால் வேலையின்மை, வறுமை, நாட்டை ஆட்டிப் படைத்து சாதிக் கொடுமைகளும், அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

 

k

 

மேலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தீவிரவாத தடுப்பு மசோதா நிறைவேற்றம் போன்றவற்றை செய்துள்ளார். காஷ்மீரில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துவிட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என மத்திய அரசு கூறுவது அபத்தமான ஒன்று.  மத்திய அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை வைத்து மிரட்டுகின்றனர், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்களை, பாஜக விலைக்கு வாங்கி தங்கள் கட்சியான பாஜகவை பலப்படுத்தி கொள்வதாகவும்  குற்றம்சாட்டினார்.

 

மத்தியில் ஆளும் பாஜக அரசு எதை செய்தாலும் அதற்கு தலையாட்டும் பொம்மை அரசாக தமிழகத்தில் ஆளும் எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் ஜால்ரா போட்டு  துதி பாடி வருகிறார். அவர் மொட்டைத் தலையில் சிகை அலங்காரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு உள்ளார். இது நிலைக்காது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்தி வரதரை நள்ளிரவில் ரஜினிகாந்த் தரிசனம் செய்துள்ளதாக செய்திகள் வருகிறது. அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு ஆகம விதியெல்லாம் கணக்கு இல்லை என்றார்.