சிதம்பரம் ராமசாமி நகர மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார். நகரமன்ற உறுப்பினர் கல்பனா சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். சிதம்பரம் நகரமன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மூத்த நகரமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் வாழ்த்துரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், அப்பு சந்திரசேகரன், மணிகண்டன், திமுக நிர்வாகிகள் ராஜராஜன், வி.என்.ஆர் கிருஷ்ணமூர்த்தி, பா.பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் மாணவ மாணவிகள் மொத்த 272 மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இதேபோல் பச்சையப்பன் பள்ளியில் நடைபெற்ற மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் செந்தில்குமார் கலந்துகொண்டு 54 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.