Skip to main content

பிரதமர் மோடியின் பெயரைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Fraud of crores using the name of pm Modi

 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கோவிந்தநாயக்கன் பாளையம் தாளமடை பகுதியைச் சேர்ந்தவர் விஜயசங்கர். கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு நன்கு தெரிந்தவர்களான நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், ஆறுமுகம், மணி ஆகிய மூன்று பேரும் பிரதமர் மோடி வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு ஏழை மக்கள் அறக்கட்டளை மூலம், ஏழைகளுக்கு வழங்கும் திட்டம் உள்ளதாக கூறி உள்ளனர். இதில் 10 ஆயிரம் கட்டினால் 10 லட்சம் என்றும், 1 லட்சம் கட்டினால் 1 கோடி தருவதாகவும் அதுவும் வங்கி மூலமாகவே வரும் என்றும் கூறியுள்ளனர்.

 

மேலும் இந்த பணத்தை பெற வருமான வரித்துறைக்கும், ஆடிட்டர் செலவுகளுக்கும் பணம் கொடுக்க வேண்டி உள்ளது. அதற்காக நீங்கள்  பணம் கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் கூறி உள்ளனர். இதை விஜயசங்கரிடம் மட்டுமல்லாமல் அவரது நண்பர்களிடமும் கூறி உள்ளனர். இதனை நம்பி விஜய்சங்கர் முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் கட்டமாக 80 ஆயிரம் ரூபாயும் கொடுத்து உள்ளார். இதே போல அப்பகுதியை சேர்ந்த பலரும் பணம் கொடுத்து உள்ளனர். ஒரு மாதத்தில் பணம் கிடைக்கும் என்று மூன்று பேரும் கூறியிருந்த நிலையில், இது வரை பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்து உள்ளனர். மேலும் கொடுத்த பணத்தையாவது திருப்பி கொடுக்கக் கோரி கேட்ட பொழுது, தரமுடியாது. உன்னால் செய்ய முடியுமோ செய்து கொள் என்று மிரட்டி உள்ளனர்.

 

இதனால் பாதிக்கப்பட்ட விஜயசங்கர் உட்பட 5க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்கள், இதே போல 40 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஏமாற்றி உள்ளதாகவும் சுமார் 1 கோடியே 80.லட்சம் ரூபாய் அவர்கள் பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும், உடனடியாக பணத்தை திருப்பி பெற்றுத் தந்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்