Published on 27/06/2019 | Edited on 27/06/2019
தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவின் பேரில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
![Four IAS officers, including Salem District Collector Rohini, transferred](http://image.nakkheeran.in/cdn/farfuture/Eob8U---y_c-Z2bLUoMJtqrZoCkHzOG0emUdMwSYBAw/1561652146/sites/default/files/inline-images/rohi.jpg)
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தமிழ்நாடு இசைக் கல்லூரியின் பதிவாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் ஆட்சியராக மாற்றப்பட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மதுரை ஆட்சியராக டி.எஸ்.ராஜசேகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இசை பல்கலை பதிவாளராக இருந்த சீதாலட்சுமி சென்னை ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.