Published on 22/06/2020 | Edited on 22/06/2020

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகப்படியான எண்ணிக்கையில் தினமும் உயர்ந்து வருகின்றது. குறிப்பாக சென்னை. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகின்றது.
இதனால் இந்தக் குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு வரும் 30 தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்நிலையில் இந்த நான்கு மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் கரோனா குறித்த 4 பக்க விளக்கக் குறிப்பும் வழங்குகின்றனர்.