திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இரு கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழு திமுக குழுவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தொடர்ந்து தங்களுக்கான தொகுதிகள் என ஒரு பட்டியலையும் திமுக தலைமையிடம் கொடுத்திருந்தது கம்யூனிஸ்ட் கட்சிகள்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா மூன்று இடங்கள் என பேச்சுவார்த்தையில் பேசி தலா இரண்டு இடங்கள் என முடிவு செய்தது. திமுக தலைமையும் இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் வழங்க ஏறக்குறைய முடிவு செய்துவிட்டது. நாளை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும், திமுக நிர்வாகிகளும் இறுதியாக பேசி தொகுதிகளை அறிவிக்க உள்ளனர். ஆக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்ந்து திமுக கூட்டணியில் நான்கு தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 5 ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சிகளின் அலுவலங்களில் நடக்கிறது. அதில் போட்டியிடும் தொகுதியை கட்சி தலைவர்கள் அறிவிப்பார்கள்.