சென்னை நந்தனத்தில் மதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை நான் எதிர்க்கிறேன் எனக்கூறியுள்ளார். அவர் பேசியதாவது,
![former minister yashwanth shinha speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/pkkGQr5nL7Al1bi-iTaTUsQ4JkcPEyo7bB0jzky_GdQ/1568558020/sites/default/files/inline-images/zzz11_2.jpg)
இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து நான் வந்தாலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை நான் எதிர்க்கிறேன். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இந்தியப்பண்பாடு தெரியவில்லை. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பிரதமர் என்ற முறையை இன்றைய ஆட்சியாளர்கள் பின்பற்றுகின்றனர். காஷ்மீரிலிருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் அதற்காக கவலைப்படுகிறது சென்னை என்றார்.