![former minister manikandan police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/SSHmuLEU_Sm_jn_s3BHFjN1ffClyoRtcalOzjhJ9_Rg/1622627407/sites/default/files/inline-images/mni%20%281%29.jpg)
அதிமுகவைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் நிலையத்தில் துணை நடிகை பாலியல் மற்றும் கருக்கலைப்பு புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக அமைச்சர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் மீதான ஆதாரங்களைத் திரட்ட தனிப்படை காவல்துறையினர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் உதவியாளரிடம் விசாரணை நடத்தவும் தனிப்படை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்கும் பணியில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே, பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.