
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார். பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் புதுச்சேரிக்குப் புறப்பட்டார்.
புதுச்சேரியில் நடைபெறவுள்ள அரசு விழா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து, இன்று (25/02/2021) பிற்பகல் கோவையில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
கடந்த 2018- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரிக்கு பிரதமர் மோடி சென்ற நிலையில், மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று புதுச்சேரி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.