காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்பொழுது வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.70 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
மூன்றாவது முறையாக வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒலிபெருக்கி மூலமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.