முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.பி.க்கு டிஜிபி அந்தஸ்த்தில் உள்ள உயரதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில், விஷாகா கமிட்டி தமிழக அரசிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்பித்துள்ளது.
முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு டிஜிபி அந்தஸ்த்தில் உள்ள உயரதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக அந்தப் பெண் எஸ்.பி. புகாரளிக்க முன்வந்த நிலையில், செங்கல்பட்டு எஸ்.பி. அவரை புகார் கொடுக்க விடாமல் தடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தமிழக அரசின் சார்பில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விஷாகா கமிட்டி அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 26ஆம் தேதி விஷாகா குழு அவர்களது விசாரணையை தொடங்கிய நிலையில், 14 சாட்சிகளுடன் நடத்திய முதற்கட்ட விசாரணை அறிக்கையை இன்று (13.04.2021) தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது விஷாகா கமிட்டி.