Published on 04/08/2021 | Edited on 04/08/2021
தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பாக வெளியாகும் வெள்ளை அறிக்கை 120 பக்கங்களைக் கொண்டது. இந்த வெள்ளை அறிக்கையில் கடன் விவரங்கள், வருவாய் இழப்புக்கான காரணங்கள், மெட்ரோ வாட்டர், மின்வாரியம், போக்குவரத்துத் துறையின் வரவு - செலவு உள்ளிட்டவை இடம்பெறும்.