ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காயக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோகனாம்பாள் வயது (40) என்பவர் அவரது மாமியார் கல்யாணி என்பவருக்கு ஆற்காடு பகுதியில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக 8 மாதங்களுக்கு முன்பு 67,000 ரூபாய் மகளிர் லோன் வாங்கி கொடுத்துள்ளார் அதில் 3,490 ரூபாயை மாதத் தவணையாக செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதி மாதம் 13-ஆம் தேதி அன்று கட்டவேண்டிய லோன் தொகையை குடும்ப சூழ்நிலை காரணமாக காலதாமதம் ஏற்பட்டதாக இரண்டு நாட்கள் கடந்தும் கட்டாமல் இருந்துள்ளதாகவும் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் லோன் வசூல் செய்யும் கார்த்திகேயன் என்பவர் வசூல் செய்வதற்காக 16-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை கல்யாணி என்பவரின் வீட்டின் முன்பாக நின்று தரக்குறைவாகவும் அங்கு உள்ள பெண்களை ஒருமையில் பேசியதாக தெரிகிறது.
இதனால் அச்சமடைந்த பெண்கள் இது குறித்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்களை ஒருமையில் பேசிய அந்த கலெக்ஷன் ஊழியரிடம் தொலைப்பேசி எண் மற்றும் முகவரியை வாங்கிக் கொண்டு காலையில் ஆற்காடு காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று கூறி அனுப்பினர். மறுநாள் காலை கார்த்திகேயனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் லோன் வழங்கும் தனியா நிறுவனங்களில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வந்து அராஜகமாக வசூல் செய்வதனை தடுக்க வேண்டும் அப்படி வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.