தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
முன்னதாக ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ''தமிழகத்தில் பெரும்பான்மை கட்சியாக இருப்பது அதிமுக தான். அவர்களுக்குப் பிறகுதான் பாஜக. எனவே அவர்களை முன்வைத்துத்தான் நாங்கள் இந்தத் தேர்தலை சந்திக்கப் போகிறோம். தமிழக மக்கள் சரியான முடிவை அதிமுக கூட்டணிக்குக் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். பிரதமர் செய்த அனைத்து நன்மைகளையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் அவர்கள் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். கே.பி.முனுசாமி சொல்லும் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் எடுப்பதே இறுதி முடிவு. அவர்கள் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்'' என்றார்.