Published on 29/11/2018 | Edited on 29/11/2018

இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ், கஜா புயலால் பலத்த சேதத்தை சந்தித்த டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பாதிப்புகளை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அரசின் முன்னெச்சிரிக்கை நடவடிக்கை மூலம் புயல் பாதிப்பில் உயிரிழப்புகள் குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.