தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சமீபமாக உலக திரைப்படங்களை மக்களுக்கு காட்சிப்படுத்துகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக அந்த நிகழ்வை தமிழகத்தின் ஏதாவது ஒரு ஊரில் நடத்தும். அதன்படி 6வது உலக திரைப்பட விழாவை திருவண்ணாமலை நகரில் வரும் அக்டோபர் 16 முதல் 20 வரை 5 நாட்கள் நடத்துகிறது.
அருணச்சாலம் என்கிற குளிர்சாதன வசதி செய்யப்பட்ட திரையரங்கில் இந்த விழா நடைபெறுகிறது. 5 நாட்களும் சர்வதேச பார்வையாளர்களை ஈர்த்த திரைப்படங்கள் இங்கு திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வின் தொடக்க விழாவிற்கு திரை நட்சத்திரங்களாக மகேந்திரன், கிரிஷ்கர்ணட், மிருணாள் சென் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த உள்ளனர். விழாவில் திரைப்பட இயக்குநர் கோபி, தமுஎகச வின் மாநில தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொள்கின்றனர்.
மலையாளத்தின் கும்பலங்கி நைட்ஸ், ஹங்கேரி நாட்டு படமான கோல்டு வார், ஸ்வீடன் நாட்டு திரைப்படமான சம்மர் வித் மோனிகா, அமெரிக்காவின் நியூயார்க் பப்ளிக் லைப்ரரி, மெக்ஸிகோ நாட்டு திரைப்படமான ஐ ட்ரீம் அனதர் லாங்வேஜ், இந்தி படமான மாண்டோ, நியூட்டன், தமிழ்படமான டூலெட், ஆஸ்கார் விருது பெற்ற கிரீன் புக் என பலப்படங்கள் திரையிடப்படுகின்றன.
திரைப்படங்கள் திரையிடுவதோடு சாதித்த திரை நட்சத்திரங்கள், திரைப்பட இயக்குநர் பிரம்மா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் செழியன், இயக்குநர் எடிட்டர் பி.லெனின், இயக்குநர் லெனின்பாரதி பார்வையாளர்களோடு உரையாடும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிறைவு விழாவில் நடிகை ரோகிணி, இயக்குநர் ராஜுமுருகன், எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா, ராமச்சந்திரன் போன்றோர் கலந்துக்கொள்கின்றனர்.