மதுரை மாவட்டம், திலகர் திடல் காவல் சரகத்தினுள் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயது ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆசிரியை மகனுடன் தனியே வசித்துவருகிறார். இந்நிலையில் இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகு அவர்கள் இருவரும் அவ்வப்பொழுது தனிமையில் இருந்துவந்துள்ளனர்.
இந்த ஆசிரியை மதுரையில் பள்ளியில் பணி புரிவதோடு வீட்டிலும் தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார். அப்படி டியூஷன் படிக்க வரும் மாணவர்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தி அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவைத்துள்ளார். இதில் அதிர்ந்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் சொல்லியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் மாணவர்கள் மதுரை கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்களின் புகாரை பெற்ற கரிமேடு காவல்துறையினர், ஆசிரியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில், அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாணவர்களின் ஏராளமான ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணையில் இந்த விவகாரத்தில் அவரின் ஆண் நண்பர் வீரமணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்ற்னர்.