Skip to main content

பல பெண்களுடன் தொடர்பு - தட்டி கேட்ட மகனை கொன்ற தந்தை

Published on 30/09/2018 | Edited on 30/09/2018


    

Father who killed his son



பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தஞ்சை அண்ணாநகர் 13-வது தெருவில் வசித்து வருபவர் முகமது ஜாகீர். 52 வயதாகும் இவருக்கு மனைவியும், 22 வயதில் அப்துல் ரகுமான் என்ற மகனும் உள்ளார். மளிகை கடை நடத்தி வரும் முகமது ஜாகீர், அடிக்கடி கடையை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிடுவார். 
 

ஏன் அடிக்கடி கடையை பூட்டுகிறார் என்று மனைவி சந்தேகப்பட்டுள்ளார். இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் முகமது ஜாகீர் மனைவியிடம், உங்கள் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் அடிக்கடி வெளியூர் செல்கிறார். கடையை சரியாக திறப்பதில்லை என்று சொல்லியுள்ளனர்.
 

இதனை கேட்டதும், முகமது ஜாகீர் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றினார் முகமது ஜாகீர். ஈரோட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தனது மகன் அப்துல் ரகுமானிடம் தனது கணவரின் செயலை சொல்லியுள்ளார். தனது தாயை ஈரோட்டுக்கு வர சொல்லிய ரகுமான், தஞ்சைக்கு சென்றார். 
 

தஞ்சைக்கு வந்த அப்துல் ரகுமான், பல பெண்களுடன் பழக்கம் வைத்துள்ளதை கண்டித்து தந்தை முகமது ஜாகீரை சத்தம் போட்டார். மேலும் தாயுடன் சேர்ந்து வாழும்படியும் கூறினார். இதுதொடர்பாக தந்தை- மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
 

இதேபோல் சம்பவத்தன்று தகராறு நடந்தது. பிறகு அப்துல் ரகுமான் வீட்டில் படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில் அதிகாலை எழுந்த முகமது ஜாகீர், தூங்கி கொண்டிருந்த மகன் அப்துல் ரகுமானை பார்த்து கடும் ஆத்திரம் அடைந்தார்.
 

உடனே வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை தூக்கி அப்துல் ரகுமான் தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைநத அப்துல் ரகுமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முகமது ஜாகீர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
 

அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து முகமது ஜாகீர் வீட்டை திறந்து பார்த்தபோது அப்துல் ரகுமான் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தஞ்சை மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகுமானின் உடலை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வரும் முகமது ஜாகீரை போலீசார் தேடி வருகிறார்கள்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்; சிறுமியை ஆற்றில் தூக்கி வீசிய தந்தை

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Father throws girl into river Yamuna after talking to boyfriend

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி ஒருவர். இவர் தனது ஆண் நண்பருடன் பேசியிருக்கிறார். இது சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவர அவரது தந்தை சிறுமியைத் திட்டியுள்ளார். அத்துடன் உடனடியாக சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள சிறுமிக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாததால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை சிறுமியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். 

இந்த நிலையில், சம்பவத்தன்று தந்தை சிறுமியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். சிறுமியின் தந்தை தனது நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், குருகிராம் செல்லும் வழியில் யமுனை ஆற்றின் மிதவை பாலத்தில் மூவரும் வந்துகொண்டிருந்த போது, தந்தை சிறுமியின் கழுத்தைத் துணியால் நெரித்துள்ளார். பின்பு அவரும் அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர். ஆற்றில் அடித்துக்கொண்டு போன சிறுமியின் கதறல் கேட்டு ஆற்றுப்படுகையில் உள்ள மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் புகாரின் பேரில் சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பர் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குழந்தைகள் நல அதிகாரிகளிடம் சிறுமி தனக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். பின்னர், சிறுமி பாதுகாப்பாகக் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Next Story

வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்; இருவர் கைது

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Tragedy befell the father and son who went to water the field

 

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள அயன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர்  பேச்சிமுத்து (வயது 55). இவரது மகன் வனராஜ் (வயது 28). விவசாயிகளான இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு மணிமுத்தாறு அருகே உள்ள விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 

போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கால்வாய் தண்ணீரில் மர்ம நபர்கள் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மின்வேலி வைத்த மதிவாணன், அலெக்ஸாண்டர் என்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.