Skip to main content

லாரிகள் வேலை நிறுத்தத்தால் நெல் விற்பனை நிறுத்தம் - விவசாயிகள் வேதனை! 

Published on 22/07/2018 | Edited on 27/08/2018
ri

 

குறுவை சாகுபடியில் நெல் அறுவடை அதிகரித்துள்ளது. இதனால்  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தினந்தோறும் 10000-த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளின் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் லாரிகளின் வேலை நிறுத்த போராட்டத்தால், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் நெல் மூட்டைகளை ஏலம் எடுப்பதை தவிர்த்துள்ளனர். இதனால் ஒழுங்கு முறை விற்பனை கூட நிர்வாகிகள் லாரிகளில் வேலை நிறுத்த போராட்டம் முடியும் வரை நெல்லுக்கு மட்டும் விற்பனை கிடையாது என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயிகள் என்ன செய்வதன்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.

 

nel

 

இதுகுறித்து மாணிக்கத்தை சேர்ந்த விவசாயி செல்லபெருமாள் கூறுகையில்,
"கடந்த மூன்று மாதங்களாக இரவு பகலாக கஷ்டப்பட்டு அறுவடை செய்து, விற்பனைக்காக ஒழுங்கு முறை கூடத்துக்கு வந்தால், லாரிகள் வேலை நிறுத்தம் என கூறி நெல் வியபாரிகள் நெல்லை கொள்முதல் செய்யமுடியாது என்கின்றனர். 


லாரிகள் வேலை நிறுத்தத்தை  சாதகமாக ஆக்கி கொள்ளும்  வியாபாரிகள் நெல்லின் விலையை குறைத்து விவசாயிகள்  வயிற்றில் அடிக்கிறார்கள். கடந்த வாரம்  1400 வரை விலை போன நெல்லானது தற்போது 1000 ரூபாய்க்கு குறைவாக கேட்கிறார்கள்.  இதே நிலை நீடித்தால், தங்களின் நிலத்தை விற்று தான் குடும்பத்தை காப்பாற்றுவதுடன், கடன் சுமைகளிலிருந்தும் மீள முடியும்" என்றும் மனவேதனையுடன் கூறுகிறார். 

 

மருங்கூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  "நெல்லை அறுவடை செய்வதற்கே ஏக்கருக்கு  15000 வரை செலவு ஆகிறது. இந்த நெல்லை விற்றுதான் ஆள்கூலி, வண்டி வாங்கிய லோன் உள்ளிட்ட கடன்களை அடைக்க வேண்டும்.  நெல்லை கொள்முதல் செய்யும் வியபாரிகள் லாரிகள் வேலை நிறுத்தத்தால் நெல்லை விறபனைக்கு எடுத்தால் தங்களுக்கு நஷ்டம் ஆகும் என்று  கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். இதனால் எல்லா வகையிலும் நஷ்டம் அடைவது விவசாயிகள் தான் என்றார்.

 

மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதுடன், வியாபாரிகள் சின்டிகேட் அமைத்து நெல் விலையை குறைவாக கொள்முதல் செய்வதை தடுத்து விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வழி வகை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர் விவசாயிகள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'விண்ணை முட்டும் அரிசி விலை'-ராமதாஸ் கண்டனம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
'Skyrocketing rice prices' - Ramadoss condemned

'விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை' என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரிசி விலை வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகரிக்கும். சம்பா/தாளடி அறுவடைப் பருவமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை பெருமளவில் குறையும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இப்போது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை அதிகரித்து உள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.1450 லிருந்து ரூ1600 ஆகவும், 62 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை 1350 ரூபாயிலிருந்து ரூ.1720 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோவுக்கு குறைந்தபட்சம் 6 ரூபாயிலிருந்து 8 ரூபாய்  வரை அரிசி விலை அதிகரித்திருக்கிறது. இந்த விலை உயர்வு இன்னும் தொடரும் என்று தெரிகிறது.

மிக்ஜம் புயல் காலத்தில் பெய்த மழையால் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்தது, காவிரி பாசன மாவட்டங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால்  2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் முழுமையாகவும், ஒன்றரை லட்சம் ஏக்கரில் பகுதியாகவும்  கருகியதால் விளைச்சல் குறைந்தது ஆகியவை தான் முதன்மைக் காரணங்களாக கூறப்படுகின்றன.

தென்னிந்தியாவில் அதிக அளவில் நெல் விளையும் மாநிலங்களான ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் கூட போதிய அளவில் நெல் விளைச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், அம்மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லை ரூ.3,000 வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதுவும் அரிசி விலை உயர்வுக்கு காரணம். இவை தவிர  அரிசி ஆலைகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது மூன்றாவது காரணமாக கூறப்படுகிறது.

நெல் மூட்டைகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் அரிசியின்  விலை கிலோவுக்கு ரூ.12 வரை அதிகரிக்கக்கூடும் என்றும், ஒரு கிலோ பொன்னி, பாபட்லா ரக அரிசியின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த வகை அரிசி கிலோ ரூ.48 முதல் ரூ.50க்கு தான் விற்கப்பட்டது. இவற்றின் விலை 50% வரை அதிகரித்து 75 ரூபாயை எட்டும் என்பது நியாயப்படுத்த முடியாததாகும்.

ஒருபுறம் அரிசி விலை உயர்ந்தால் இன்னொருபுறம் பருப்பு விலைகளும், பிற மளிகை சாமான்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அதனால், தமிழ்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது, அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை அதிகரித்திருப்பது இந்தக் குழுவுக்கு தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு  இதுவரை தும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.

அரிசி விலை உயர்வுக்கான காரணம் அதன் பற்றாக்குறை தான் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைக்கச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய வேண்டும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரிசி விலை குறைவாக இல்லை என்றால், சன்னரக அரிசியை நியாய விலைக்கடைகள் மூலம் மானிய விலையில் விற்க  அரசு முன்வர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.