சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வேளாண் உற்பத்தி பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும், எம்எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும், மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக்கூடாது, வேளாண் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்டச் செயலாளர் மணிக்கொல்லை ராமச்சந்திரன், பின்னத்தூர் ஹாஜா மொய்தீன், வாண்டையார் இருப்பு அன்பழகன், சிதம்பரம் சுரேஷ்குமார், சிவாயம் நாராயணசாமி, கவரப்பட்டு பொன்னுசாமி, இளையராஜா, கவியரசன், தங்கராசு, கீழப்பெரம்பை, கண்ணன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்து கோசங்களை எழுப்பினர்.