Skip to main content

‘வசிப்பிடம் கிடைக்கும் வரை போராட்டம்’ - தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

farmers strike

 

குடியிருக்க நிலம், வீடு வேண்டும் என்ற போராட்டத்தை தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொன்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் தலைமை தாங்கினார். இதில், ‘வசிப்பிடம் கிடைக்கும் வரை போராட்டம்’ என்ற முழக்கத்துடன் நிலம் இல்லாத கூலி விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா எட்டு சென்ட் வீட்டு மனையும், வீடு கட்ட மூன்று லட்ச ரூபாய் அரசு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொன்டதால் சத்தியமங்கலம் பரபரப்பாக காணப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்