
பாலிவுட் திரைப்படங்களின் பிரபல நடிகை சன்னிலியோன். கனடா நாட்டின் இந்திய வம்சாவளி பெண். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரது குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் செட்டிலாகிவிட்டது. கனடா நாட்டின் குடியுரிமையைப் பெற்ற சன்னிலியோன், மாடலிங்கில் பிரபலமானார். பிறகு ஹாலிவுட்டின் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் ஆபாச நடிகையாக அறிமுகமானார்.
50- க்கும் மேற்பட்ட ஆபாச படங்களை நடித்திருக்கும் சன்னிலியோன், அதே எண்ணிக்கையிலான ஆபாச படங்களை இயக்கியுமிருக்கிறார். ஆபாச பட நடிகைகளில் சர்வதேச அளவில் முதலிடத்திலும் இருந்திருக்கிறார் சன்னி லியோன்.
மிகவும் புகழ்ப்பெற்றிருந்த இவரை 2012-ல் இந்தியாவுக்கு அழைத்து வந்தது பாலிவுட் உலகம். ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். அதன்பிறகு, ஆபாச படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் நிறுத்திக் கொண்டார் சன்னி லியோன்.
பாலிவுட் படங்களின் முன்னணி நடிகையாக மாறிவிட்ட இவர், ஹிந்தி படங்களை தயாரிக்குமளவுக்கு முன்னேறினார். தவிர, பிரபல ஹிந்தி ஹீரோக்களின் படங்களில் குத்தாட்டம் போடுவதிலும் ஆர்வம் காட்டினார் சன்னி. சில தமிழ்ப் படங்களிலும் ஒற்றை பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.
இந்த நிலையில், தமிழ் படம் ஒன்றில் நடிப்பதற்காக நேற்று (11/12/2021) மும்பையில் இருந்து சென்னை வந்தார் சன்னி லியோன். சென்னை விமான நிலையத்தில் அவரைக் கண்டதும், விமான நிலைய அலுவலர்களிடமும், பயணிகளிடமும் திடீர் பரபரப்பு உருவானது. அவருக்கு அருகில் சென்று பலரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஏர்போர்ட் ஊழியர்கள் பலரும் அவருடன் படம் எடுத்துக் கொள்வதில் தீவிரம் காட்டினார்கள்.
விமான நிலைய வரவேற்பாளர் கேம்ப் குமாரும், படக்குழுவின் நண்பரான பாலுவும் சன்னிலியோனை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் அமர வைத்தனர். காரில் உட்கார்ந்ததும், கேம்ப் குமாரிடம், ‘’லைட்டர் அல்லது தீப்பெட்டி இருக்குமா? ’’ என்று கேட்டார் சன்னி லியோன். ஆனால், குமாரிடமும் தீப்பெட்டி இல்லை ; பாலுவிடமும் தீப்பெட்டி இல்லை.
இருவரிடமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர்களிடம் ஓடோடிச் சென்றார் கேம்ப் குமார். ஒரு போலீஸ்காரரிடமிருந்து தீப்பெட்டியை வாங்கி கொண்டு வந்து சன்னி லியோனிடம் கொடுக்க, தீப்பெட்டியை வாங்கி சிகரெட்டை பற்ற வைத்தார் சன்னி லியோன். அத்துடன், தீப்பெட்டி வாங்கிக் கொடுத்த கேம்ப் குமாரிடம் 500 ரூபாய்கொடுத்து விட்டு காரில் பறந்தார் சன்னி.
ஒரு தீப்பெட்டிக்கு 500 ரூபாய் கொடுத்து வரவேற்பாளரை அதிர்ச்சியடைய வைத்தார் நடிகை சன்னி லியோன். அதேபோல, தீப்பெட்டிக்கு 500 ரூபாயா ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் அந்த சம்பவத்தை கவனித்திருந்த விமான நிலைய ஊழியரகள்.