
மதுரை மத்தியசிறை எஸ்.பி.ஊர்மிளா, பெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலாவையும் உள்ளிட்டோரை ஆடியோ மூலம் பேசி மிரட்டிய பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் சர்ச் ரோட்டில் பிரபல ரவுடி நாகராஜை ஏ.டி.எஸ்.பி.சுருளி. இன்ஸ்பெக்டர் மதனகலா. எஸ்.பி.ஏட்டு காசிராஜன் ஆகியோர் இன்று காலை கைது செய்தனர். அவனிடம் இருந்த பையில் இரண்டு கத்திகள், இரண்டு பொம்மை துப்பாக்கிகள், மூன்று செல்போன்கள், உதவி நீதிபதிக்கான போர்டு, வழக்கறிஞர் ஆடை, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம், ஐநூறு, இருநூறு ரூபாய் கள்ள நோட்டுகள், பத்திரிக்கை, வழக்கறிஞர் அடையாள அட்டைகள், ஏ.டி.எம் கார்டு, போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தற்போது தென்கரை காவல்நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. மதுரையில் கரிமேடு இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையிலான போலீசார் தற்போது தென்கரை காவல்நிலையத்தில்தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.